உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / வேன் மீது கார் மோதல்: பெண் பலி; 14 பேர் காயம்

வேன் மீது கார் மோதல்: பெண் பலி; 14 பேர் காயம்

விக்கிரவாண்டி : விக்கிரவாண்டி அருகே வேன் மீது கார் மோதிய விபத்தில் பெண் உயிரிழந்தார். 14 பேர் படுகாயமடைந்தனர்.விழுப்புரம் மாவட்டம், மயிலம் அடுத்த பாதிராப்புலியூர் கிராமத்தை சேர்ந்த கூலித் தொழிலாளர்கள் 14 பேர் தோஸ்த் வேனில் கடலுார் மாவட்டம், வேப்பூரில் புதிதாக அமைக்கப்படும் மனைப்பிரிவு வேலைக்காக சென்று நேற்று மாலை வீடு திரும்பினர்.வேனை மேலக்கொந்தையை சேர்ந்த சுரேஷ்குமார், 45; ஓட்டினார். இரவு 8:10 மணியளவில், விக்கிரவாண்டி அடுத்த தனியார் கல்லுாரி எதிரே, பின்னால் சென்னை நோக்கிச் சென்ற ஹூண்டாய் கார் மோதியது. இதில், வேன் நிலை தடுமாறி சாலையோர மரத்தின் மீது மோதி கவிழ்ந்தது. இந்த விபத்தில், பாதிராப்புலியூரை சேர்ந்த சந்திரன் மனைவி ராணி, 55; சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.விக்கிரவாண்டி போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று, காயமடைந்த சிவா, 47; சுரேஷ், 45; அய்யப்பன், 51; திருமுருகன், 24; மாரியம்மாள், 41; உட்பட 14 பேரை மீட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சேர்த்தனர். விபத்து குறித்து விக்கிரவாண்டி போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ