உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / முன்விரோத தகராறு7 பேர் மீது வழக்கு

முன்விரோத தகராறு7 பேர் மீது வழக்கு

திருவெண்ணெய்நல்லுார்: திருவெண்ணெய்நல்லுார் அருகே முன்விரோதம் காரணமாக ஏற்பட்ட தகராறில் போலீசார் 7 பேர் மீது வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.திருவெண்ணெய்நல்லுார் அடுத்த துலுக்கப்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் ராமலிங்கம் மனைவி விஜயா, 49; இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த கண்ணன் என்பவரும் சொத்து சம்மந்தமாக முன்விரோதம் உள்ளது.இந்நிலையில் கடந்த 26ம் தேதி மாலை 4:00 மணியளவில் இருவருக்குமிடையே திடீரென வாய்தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது கண்ணன், உஷா, பரசுராமன், மணிகண்டன், புஷ்பா, கார்த்திகா, வசந்தா ஆகிய 7 பேர் சேர்ந்து விஜயாவை தாக்கி புடவையை கிழித்துள்ளனர்.இது குறித்து விஜயா திருவெண்ணெய்நல்லுார் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன்பேரில் போலீசார் கண்ணன், உஷா, பரசுராமன் உட்பட 7 பேர் மீது வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ