உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / போலி ஆவணம் மூலம் இன்சூரன்ஸ் இழப்பீடு பெற்ற 2 பேர் மீது வழக்கு

போலி ஆவணம் மூலம் இன்சூரன்ஸ் இழப்பீடு பெற்ற 2 பேர் மீது வழக்கு

விழுப்புரம்: விழுப்புரத்தில் நடந்த வாகன விபத்தில், போலி ரசீது மூலம் இன்சூரன்ஸ் இழப்பீடு பெற்றதாக 2 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர். திருச்சி, லால்குடி பகுதியைச் சேர்ந்தவர் செல்லப்பா, 50; இவரது லாரி கடந்த 2016ம் ஆண்டு ஆகஸ்ட் 20ம் தேதி விழுப்புரம் எல்லீஸ்சத்திரம் சாலையில் விபத்தில் சிக்கியுள்ளது. இந்த விபத்து குறித்து, அந்த லாரிக்கு காப்பீடு செய்த இன்சூரன்ஸ் நிறுவனத்தில் முறையிட்டு 20 ஆயிரம் ரூபாய் இழப்பீடு பெற்றுள்ளனர். அதற்காக, போலி இன்சூரன்ஸ் ரசீது சமர்ப்பித்து ஏமாற்றியதாக புகார் எழுந்தது. இது குறித்து, தனியார் இன்சூரன்ஸ் நிறுவன மேலாளர் கார்த்திகேயன் அளித்த புகாரின் பேரில், செல்லப்பா மீது, விழுப்புரம் தாலுகா போலீசார் தற்போது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர். இதே போல், வளவனுார் அடுத்த சொரப்பூர் பகுதியில் கடந்த 2018ம் ஆண்டு மார்ச் 4ம் தேதி நடந்த விபத்தில், கடலுாரைச் சேர்ந்த ஒரு சுமோ கார் விபத்துக்குள்ளானது. அதற்காக போலி இன்சூரன்ஸ் ரசீது மூலம் 15 ஆயிரம் ரூபாய் இழப்பீடு பெறப்பட்டுள்ளது. இதில், வாகன உரிமையாளர் குறித்த தகவல் ஏதும் தெரியாததால் வாகனத்தின் பதிவு எண்ணை வைத்து தனியார் இன்சூரன்ஸ் நிறுவன மேலாளர் கவிபாரதி அளித்த புகாரின் பேரில், வளவனுார் போலீசார் வழக்குப் பதிந்து அந்த நபரை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை