உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / முதியவரை தாக்கிய 3 பேர் மீது வழக்கு

முதியவரை தாக்கிய 3 பேர் மீது வழக்கு

விழுப்புரம் : விழுப்புரத்தில் முதியவரை தாக்கிய 3 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.விழுப்புரம் அடுத்த எருமனந்தாங்கலைச் சேர்ந்தவர் உண்ணாமலை, 57; அதே பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடேசன், 52; உறவினர்கள். நேற்று முன்தினம் உண்ணாமலை வீட்டின் முன் இருந்த 50 பன்றிகளில் 2 பன்றிகளைக் காணவில்லை.இதை உண்ணாமலை, அங்கிருந்த வெங்கடேசன், சுரேஷ்,19; சந்துரு (எ) பாலகிருஷ்ணன்,19; ஆகியோரிடம் கேட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அவர்கள், உண்ணாமலையை திட்டி, தாக்கினர். விழுப்புரம் தாலுகா போலீசார் வெங்கடேசன் உட்பட 3 பேர் மீது வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை