உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / நிலத் தகராறில் 3 பேர் மீது வழக்கு

நிலத் தகராறில் 3 பேர் மீது வழக்கு

விழுப்புரம்: வானுார் அருகே நிலத் தகராறில் 3 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.வளவனுார் அடுத்த எஸ்.மேட்டுப்பளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராமமூர்த்தி மகன் யுவராஜா, 30; விவசாயி. இவரது பக்கத்து நிலத்துகாரர்களான பரசுரெட்டிபளையத்தைச் சேர்ந்த வீராசாமி, பாலாஜி, சிவசங்கர் ஆகியோர், இரு தினங்களுக்கு முன், நிலத்தின் நடுவே பொதுவாக உள்ள வரப்பை வெட்டினர்.இதனை யுவராஜா தட்டிக்கேட்டதால் ஆத்திரமடைந்த 3 பேரும் யுவராஜவை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர்.புகாரின் பேரில், வளவனுார் போலீசார் வீராசாமி உட்பட 3 பேர் மீது வழக்குப் பதிந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ