கரகம் எடுப்பதில் தகராறு 4 பேர் மீது வழக்கு
விழுப்புரம் : கோவிலில் கரகம் எடுப்பது தொடர்பான பிரச்னையில், 4 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர். விழுப்புரம் அடுத்த ஆனாங்கூர் காலனி கெங்கை அம்மன் கோவில் திருவிழாவில் கரகம் யார் எடுப்பது என்பதில் நேற்று பிரச்னை ஏற்பட்டது. இதில், அதே பகுதியை சேர்ந்த மாயக்கண்ணன் மகன்கள் சதீஷ், சந்தோஷ் மற்றும் இருசப்பன் மகன் விக்கி, திருக்கோவிலுாரை சேர்ந்த சசி ஆகியோரிடையே தகராறு ஏற்பட்டது.விழுப்புரம் தாலுகா போலீசார் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, சதீஷ் உள்ளிட்ட நான்குபேர் மீது வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.