உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் /  தம்பதியை தாக்கிய 4 பேர் மீது வழக்கு

 தம்பதியை தாக்கிய 4 பேர் மீது வழக்கு

விழுப்புரம்: தகராறில் கணவன், மனைவியை தாக்கிய ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர். விழுப்புரம், கந்தசாமி லே அவுட்டைச் சேர்ந்தவர் குமரவேல் மனைவி பொற்செல்வி, 45; பியூட்டி பார்லர் வைத்துள்ளார். இவரது அண்ணன் மகளான வி.மருதுாரைச் சேர்ந்த வடிவு, 3 ஆண்டுகளுக்கு முன் தனது 4 சவரன் நகையை பொற்செல்வியின் பியூட்டி பார்லரில் வேலை செய்யும் தமிழ் என்பவருக்கு கொடுத்துள்ளார். அந்த நகையை தமிழ் திருப்பிக் கொடுக்காததால், நேற்று முன்தினம் வடிவு, அவரது தாய் அமுதா, சகோதரி வைத்தீஸ்வரி, சகோதார் ஜெய் ஆகியோர் பொற்செல்வி வீட்டிற்கு சென்று, அவரையும் அவரது கணவரையும் திட்டி தாக்கினர். இதுகுறித்த பொற்செல்வி கொடுத்த புகாரின் பேரில், அமுதா உட்பட 4 பேர் மீது விழுப்புரம் மேற்கு போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி