மேலும் செய்திகள்
இளம்பெண் தற்கொலை
03-Jan-2025
விழுப்புரம்: விழுப்புரத்தில் மனைவியை சந்தேகப்பட்டு தாக்கிய கணவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.விழுப்புரம் வண்டிமேடைச் சேர்ந்தவர் செந்தில்குமார்,45; இவரது மனைவி சிவரஞ்சினி,31; இவர்களுக்கு கடந்த 13 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்து, 2 ஆண் பிள்ளைகள் உள்ளனர். செந்தில்குமார் தினமும் மது அருந்திவிட்டு வீட்டிற்கு வந்து, மனைவி மீது சந்தேகப்பட்டு, திட்டி தகராறு செய்து வந்துள்ளார். இதனால், கடந்த 7 மாதங்களுக்கு முன்பு, சிவரஞ்சினி தனது தாய்வீட்டிற்கு சென்று வசித்து வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் அவரது வீட்டிற்கு சென்ற செந்தில்குமார், சிவரஞ்சினியை திட்டி தாக்கியுள்ளார். புகாரின் பேரில், விழுப்புரம் மேற்கு போலீசார், செந்தில்குமார் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
03-Jan-2025