உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / தகராறில் தாக்குதல் 4 பேர் மீது வழக்கு பதிவு

தகராறில் தாக்குதல் 4 பேர் மீது வழக்கு பதிவு

விழுப்புரம்: தகராறில் தாக்கிக்கொண்ட 4 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.விழுப்புரம் சேவியர் காலனியைச் சேரந்தவர் மைக்கல் மகன் ஷாம், 23; இவரது தம்பி தேவா, 22; உறவினர் எழில் ஆகியோருடன் முத்தோப்பு மைதானத்தில் நேற்று முன்தினம் கிரிக்கெட் விளையாடினர். அப்போது, அதே பகுதியை சேர்ந்த ஸ்ரீபன், ஜெபஸ்டின் ஆகியோர் கிண்டல் செய்தனர். இதனால், ஏற்பட்ட தகராறில் இருதரப்பினரும் தாக்கிக் கொண்டனர்.இருதரப்பு புகாரின்பேரில், ஸ்ரீபன், ஜெபஸ்டின், தேவா, ஷாம் ஆகிய 4 பேர் மீது விழுப்புரம் டவுன் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை