இரு தரப்பினர் மோதல் 5 பேர் மீது வழக்கு பதிவு
திண்டிவனம்: திண்டிவனத்தில் இரு தரப்பினர் தாக்கி கொண்ட சம்பவத்தில் 5 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்துள்ளனர். ரோஷனையை சேர்ந்த ஏழுமலை மகன் மவுலீஸ்வரன், 24; வி.சி.க., நிர்வாகி. இவரும், இதே பகுதியை சேர்ந்த விஷால்,21; விஜய்,19; ஆகியோர் கடந்த ஒரு மாதத்திற்கு முன் திண்டிவனம் அருகே தீர்த்தகுளம் பகுதி சென்றனர். அங்கிருந்த அதே பகுதி விமல்,18; சூரியபிரகாஷ், 24; இருவரும், ஏன் இங்கு வருகிறீர்கள் என கேட்டு தகராறு செய்துள்ளனர். இதனால் இரு தரப்பிற்கும் முன்விரோதம் இருந்து வந்தது. இந்த நிலையில், நேற்று முன்தினம் தீர்த்தகுளம் பகுதியில் விமல், சூரியபிரகாஷ் இருவரும், பா.ம.க., பேனர் கட்டினர். அங்கு வந்த மவுலீஸ்வரன் தரப்பினர், பைக் ஸ்டாண்டை தரையில் தேய்த்து சத்தம் எழுப்பி சென்றனர். இதனால், இரு தரப்பினருக்கு வாய் தகராறு ஏற்பட்டு தாக்கி கொண்டனர். இரு தரப்பு புகார்களின் பேரில், திண்டிவனம் போலீசார் மவுலீஸ்வரன், விமல் உட்பட 5 பேர் மீது வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.