வாசகர்கள் கருத்துகள் ( 1 )
இதை வாங்கிக் கொண்டு தேர்தலில் எங்களுக்கு ஓட்டுப் போட்டு விடணும். சரியா?
விக்கிரவாண்டி: விக்கிரவாண்டியில் மழையால் பாதித்தவர்களுக்கு முதல்வர் நிவாரண உதவிகள் வழங்கினார்.விக்கிரவாண்டியில் பெஞ்சல் புயல் மற்றும் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேற்று முதல்வர் ஸ்டாலின் பார்வையிட்டார். பின்னர், மழையில் வீடு மற்றும் கால்நடைகள் இழந்த 12 பேருக்கு ரூ.1.25 லட்சம் மதிப்புள்ள நிவாரண உதவிகளை வழங்கினார்.அமைச்சர் பொன்முடி, கலெக்டர் பழனி, ரவிக்குமார் எம்.பி, அன்னியூர் சிவா எம்.எல்.ஏ., தி.மு.க., மாவட்ட பொறுப்பாளர் கவுதமசிகாமணி, ஒன்றிய சேர்மன்கள் சங்கீத அரசி ரவிதுரை, கலைச்செல்வி, பேரூராட்சி சேர்மன் அப்துல் சலாம், துணை சேர்மன் பாலாஜி, ஒன்றிய செயலாளர்கள் ரவி, ரவிதுரை, ஜெயபால், நகரசெயலாளர் நைனா முகமது, துணை செயலாளர் சுரேஷ்குமார், மாவட்ட விவசாய அணி தலைவர் பாபு ஜீவானந்தம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இதை வாங்கிக் கொண்டு தேர்தலில் எங்களுக்கு ஓட்டுப் போட்டு விடணும். சரியா?