| ADDED : ஜன 01, 2024 06:01 AM
விழுப்புரம் : திருநாவலுார் ஜோசப் கலை மற்றும் அறிவியல் கல்லுாரி, கமலா கல்வியில் கல்லுாரி சார்பில் கிறிஸ்துமஸ் விழா மற்றும் ஜோசப் மருத்துவக் கல்லுாரியின் கிறிஸ்தவ மிஷன் மருத்துவமனை அடிக்கல் நாட்டு விழா நடந்தது.கல்லுாரி வளாகத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு, செயலாளர் பிரபாகர் ஜெயராஜ் தலைமை தாங்கினார்.விழாவில், புதுச்சேரி, கடலுார் கத்தோலிக்க பேராயர் பிரான்சிஸ் கலிஸ்ட், ஆற்காடு லுத்ரன் திருச்சபை பேராயர்கள் சாமுவேல் கென்னடி, எடிசன். பெந்தகோஸ்தே திருச்சபை ஜாஷ்வா பீட்டர், செயலாளர் லுத்ரன் திருச்சபை கூட்டமைப்பு மேஷக் ராஜா, தமிழ்நாடு சிறுபான்மை அரசியல் பிரிவு தலைவர் சோமு, விஜிலென்ஸ் கண்காணிப்புக் குழு உறுப்பினர் நித்யராஜ், அருள், டாக்டர் அதிசயராஜ் உட்பட பலர் பங்கேற்றனர். நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.முன்னதாக, கல்லுாரி இயக்குனர் ஜாஸ்மின் பிரபாகர் வரவேற்றார். தாளாளர் கமலா ஜோசப் அறிக்கை சமர்பித்தார். மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடந்தது. மருத்துவக் கல்லுாரி இயக்குனர் அலெக்ஸ் நன்றி கூறினார்.