உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திர சேமிப்பு கிடங்கில் கலெக்டர் ஆய்வு

மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திர சேமிப்பு கிடங்கில் கலெக்டர் ஆய்வு

விழுப்புரம் : விழுப்புரத்தில் உள்ள இந்திய தேர்தல் ஆணைய மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திர சேமிப்பு கிடங்கில் கலெக்டர் பழனி மாதாந்திர ஆய்வு செய்தார்.விழுப்புரம் பெருந்திட்ட வளாகத்தில் இந்திய தேர்தல் ஆணைய மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திர சேமிப்பு கிடங்கு உள்ளது. இங்குள்ள, மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் உள்ள அறைக்கு சீல் வைக்கப்பட்டு, சி.சி.டி.வி., கண்காணிப்பு கேமராக்களோடு 24 மணி நேரம் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.இந்த சேமிப்பு கிடங்கில், கலெக்டர் பழனி மாதாந்திர ஆய்வு மேற்கொண்டார். சீல் வைத்துள்ள மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திர அறை, சி.சி.டி.வி., கண்காணிப்பு கேமராக்களின் செயல்பாடுகள் ஆகியவற்றை ஆய்வு செய்தார். ஆய்வின் போது, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) யோகஜோதி, வருவாய் கோட்டாட்சியர் முருகேசன், தனி தாசில்தார் (தேர்தல்) கணேசன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ