விழுப்புரத்தில் தொடர் மழை இயல்பு வாழ்க்கை பாதிப்பு
விழுப்புரம்: விழுப்புரத்தில் நேற்று ஒரு நாள் முழுவதும் பெய்த மழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. விழுப்புரத்தில் கடந்த சில தினங்களாக இரவு நேரங்களில் தொடர் மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் நள்ளிரவு தொடங்கி பலத்த மழை பெய்தது. தொடர்ந்து, நேற்று காலை 7:00 மணி முதல் பரவலாக மழை பெய்தது. காலை 10:00 மணி வரை இந்த மழை பெய்ததால், பள்ளி, கல்லுாரிக்கு சென்ற மாணவர்களும், இதர பணிகளுக்கு சென்ற பொது மக்களும், வாகன ஓட்டிகளும் அவதிப்பட்டனர். தொடர்ந்து, பகல் முழுவதும் விட்டு விட்டு மழை பெய்தது. இந்த மழை மாலை 5:00 மணி வரை தொடர்ந்தது. மாவட்டம் முழுவதும் நேற்று பகல் நேரங்களில் பரவலாக மழை பெய்தது. இதனால், பொது மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. மழையளவு (மி.மீ): விழுப்புரம் 30, கோலியனுார் 20, வளவனுார் 26, முண்டியம்பாக்கம் 20, சூரப்பட்டு 22, செஞ்சி 36, செம்மேடு 26, அவலுார்பேட்டை 13, மணம்பூண்டி 26, தி.வி.நல்லுார் 20, முகையூர் 10, அவலுார் பேட்டை 13, சராசரி 20.