உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / மாரியம்மன் கோவிலில் தீ மிதி உற்சவம்

மாரியம்மன் கோவிலில் தீ மிதி உற்சவம்

கிள்ளை:கிள்ளை தைக்கால் மகா மாரிம்மன் கோவிலில் தீமிதி உற்சவம் நடந்தது.கிள்ளை தைக்கால் மகா மாரிம்மன் கோவிலில் தீமிதி உற்சவம் நிகழ்ச்சியை முன்னிட்டு கடந்த 2ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.அதனைத் தொடர்ந்து தினசரி அம்மனுக்கு அபிஷேக ஆராதனை நடந்தது. 5ம் தேதி மாலை 6 மணிக்கு தீ மிதி உற்சவ நிகழ்ச்சியில் சுற்றுப் பகுதியினர் தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இரவு அம்மன் வீதியுலா நடந்தது.விழா ஏற்பாடுகளை கோவில் விழாக் குழுவினர்கள் மற்றும் பொதுமக்கள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை