உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / கள்ளச்சாராயம் விற்றநான்கு பேர் கைது

கள்ளச்சாராயம் விற்றநான்கு பேர் கைது

முதுநகர்:கடலூர் முதுநகர் பகுதியில் கள்ளச் சாராயம் விற்ற பெண் உட்பட நான்கு பேரை போலீசார் கைது செய்தனர்.கடலூர் முதுநகர் பகுதியில் கள்ளச் சாராயம் விற்பனை நடைபெறுவதாக கிடைத்த தகவலின் பேரில் இன்ஸ்பெக்டர் சதீஷ் தலைமையில் முதுநகர் போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டனர்.அப்போது எஸ்.என்.நகர் பகுதியில் வீட்டில் மண்பானையில் பதுக்கி சாராயம் விற்ற மாயகிருஷ்ணன், 29, மாயவன், 65, வீட்டில் சாராயம் பதுக்கி வைத்திருந்த பச்சையாங்குப்பம் அழகிரி, 52, வசந்தராயன் பாளையம் முருகன் மனைவி பிரேமா, 29 ஆகியோரை கைது செய்து. 480 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்து அழித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ