| ADDED : செப் 07, 2011 10:56 PM
பரங்கிப்பேட்டை:பாசன வாய்க்காலில் பொக்லைன் இயந்திரம் மூலம் தூர் வாரும்
பணியை தடுத்ததால் பரபரப்பு நிலவியது.பு.முட்லூர் அடுத்த அரியகோஷ்டி பாசன
வாய்க்காலில் ஒன்னரை கி.மீ., தூரம் பொக்லைன் இயந்திரம் மூலம் தூர்வாரும்
பணி நேற்று நடந்தது. வாய்க்காலில் தண்ணீர் வரும்போது தூர்வாரினால் சரியாக
செய்ய முடியாது என பாசன வாய்க்கால் சங்கத் தலைவர் விஜயகுமார் தூர்வாரும்
பணியை தடுத்து நிறுத்தினார். இதனால் வாய்க்காலில் தூர்வாரும் பணி
தடைபட்டது. இதனால் பரபரப்பு நிலவியது.தகவலறிந்த பொதுப்பணித்துறை உதவி
செயற்பொறியாளர் ராமமூர்த்தி மற்றும் அதிகாரிகள் பேச்சுவார்த்தை
நடத்தினர்.இதற்கிடையே சம்பவ இடத்திற்கு வந்த பாசன வாய்க்கால் சங்க
நிர்வாகிகள் அருள்முருகன், நடராஜன், பரமசிவம், ஏகாம்பரம் ஆகியோர் தற்போது
வாய்க்காலில் தூர்வாரினால்தான் கடைமடை பகுதியான பு.முட்லூர், அரியகோஷ்டி
பகுதிக்கு தண்ணீர் வரும். வாய்க்காலில் அதிகமாக தண்ணீர் வந்து விட்டால்
திரும்ப தூர்வார முடியாது. அதனால் இப்போதே வாய்க்காலை தூர்வார வேண்டும் என
தெரிவித்தனர். அதையடுத்து சமாதானமாகி மீண்டும் தூர்வாரும் பணி நடந்தது.