உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / சிதம்பரம் ஆர்.கே.ஜி., பவுண்டேஷன்ஆசிரியர் தின விழா கொண்டாட்டம்

சிதம்பரம் ஆர்.கே.ஜி., பவுண்டேஷன்ஆசிரியர் தின விழா கொண்டாட்டம்

சிதம்பரம்:சிதம்பரம் ஆர்.கே.ஜி., பவுண்டேஷன் மற்றும் வின்சாப்ட் கம்யூட்டர் நிறுவனம் சார்பில் ஆசிரியர் தினவிழா நடந்தது.சாரதாராமில் நடந்த விழாவிற்கு பவுண்டேஷன் செயலர் கவுரி கோதண்டராமன் குத்துவிளக்கேற்றினார். சேர்மன் நிர்மலா வரவேற்றார். அண்ணாமலைப் பல்கலைக் கழக பேராசிரியர் கதிரேசன் சிறப்புரையாற்றி ஆசிரியர்களுக்கு மரக்கன்றுகள் வழங்கினார்.சிதம்பரம் ஆர்.டி.ஓ., இந்துமதி தலைமை தாங்கி சிதம்பரம் பள்ளிகளில் சிறந்த ஆசிரியர்களுக்கு விருது வழங்கினார். வின்சாப்ட்ஸ் மாணவர்களின் கலை நிகழ்ச்சி நடந்தது.விழாவிற்கு விருக்ஷா, வீனஸ், காமராஜ், குருஞானசம்மந்தம், ராமகிருஷ்ணா, அன்னை சத்யா, அரசு பெண்கள் பள்ளி, ராமசாமி செட்டியார் பள்ளி ஆசிரியர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை