உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் /  சேதமான ரயில்வேகேட் பாதை வாகன ஓட்டிகள் அவதி

 சேதமான ரயில்வேகேட் பாதை வாகன ஓட்டிகள் அவதி

விழுப்புரம்: ரயில்வே கேட் தண்டவாள பகுதியில் கிடக்கும் ஜல்லி கற்களால் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி வருகின்றனர். விழுப்புரம் அடுத்த பானாம்பட்டு செல்லும் பாதையில் ரயில்வே கேட் உள்ளது. இந்த ரயில்வே கேட் வழியாக பண்ருட்டி, பானாம்பட்டு, வாணியம்பாளையம், கடலுார் உள்ளிட்ட பகுதிகளுக்கு ஏராளமான வாகனங்கள் செல்கிறது. ரயில்வே கேட் தண்டவாளத்தில் சில தினங்களுக்கு முன் ஜல்லி கற்கள் பெயர்த்து பழுதுபார்க்கும் பணி நடந்தது. மீண்டும் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளவில்லை. இதனால் சிதறி கிடக்கும் ஜல்லி கற்களால் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி காயமடைந்து வருகின்றனர். தண்டவாளத்தில் சீரமைப்பு பணியை துரிதப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி