உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / அடையாளம் தெரியாதவர் சாவு; போலீஸ் விசாரணை

அடையாளம் தெரியாதவர் சாவு; போலீஸ் விசாரணை

விக்கிரவாண்டி : விக்கிரவாண்டி அருகே ஆற்றில் அழுகிய நிலையில் கிடந்த ஆண் சடலம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.விக்கிரவாண்டி அடுத்த பேரணி, சங்கராபரணி ஆற்றில் நேற்று காலை ஆண் சடலம் மிதந்தது. தகவலறிந்த பெரியதச்சூர், சப் இன்ஸ்பெக்டர் நசீர் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று சடலத்தைக் கைப்பற்றி விசாரணை நடத்தினர்.இறந்த நபர், நீல நிற டி ஷர்ட், கருப்பு பேண்ட் அணிந்திருந்தார்.பேரணி வி.ஏ.ஓ., கலைச்செல்வன் அளித்த புகாரின் பேரில் பெரியதச்சூர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை