உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / பிரேத பரிசோதனை செய்வதில் தாமதம்; திண்டிவனம் அரசு மருத்துவமனை முற்றுகை

பிரேத பரிசோதனை செய்வதில் தாமதம்; திண்டிவனம் அரசு மருத்துவமனை முற்றுகை

திண்டிவனம் : திண்டிவனத்தில் தற்கொலை செய்து கொண்ட இளம் பெண்ணின் உடலை பிரேத பரிசோதனை செய்ய தாமதம் ஆனதை கண்டித்து உறவினர்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டதால் பரபரப்பு நிலவியது.திண்டிவனம், முருங்கப்பாக்கம், மணி நகரைச் சேர்ந்தவர் மணிகண்டன் மனைவி அபிநயா, 23; காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு மூன்று வயதில் ஆண் குழந்தை உள்ளது.நேற்று முன்தினம் பிற்பகல், அபிநயா வயிற்று வலியால் கணவர் வீட்டில் துாக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.ரோஷணை போலீசார் வழக்குப் பதிந்து அபிநயாவின் உடல் திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். திருமணமாகி 5 ஆண்டுகளே ஆவதால் ஆர்.டி.ஓ., விசாரணை நடக்கிறது.இந்நிலையில், நேற்று காலை 8:00 மணி முதல் திண்டிவனம் அரசு மருத்துவமனையில் அபிநயாவின் கணவர் மற்றும் உறவினர்கள் 50க்கு மேற்பட்டோர் குவிந்தனர். 11:00 மணியளவில், அபிநயாவின் பிரேத பரிசோதனை முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் நடைபெறும் எனவும், உடல் அங்கு எடுத்துச் செல்லப்படுவதாக போலீசார் தெரிவித்தனர்.இதனால், காத்திருந்த அனைவரும் மருத்துவமனையை முற்றுகையிட்டு, காலதாமதமாக கூறியதை கண்டித்தும், திண்டிவனம் அரசு மருத்துவமனையிலேயே பிரேத பரிசோதனை செய்ய வேண்டும் என வலியுறுத்தி போலீசார் மற்றும் மருத்துவமனை ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.தொடர்ந்து நடந்த பேச்சுவார்த்தையில், ஆர்.டி.ஓ., விசாரணை மூலம் நடக்கும் பிரேத பரிசோதனை இங்கு நடத்தக்கூடாது. முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில்தான் நடத்த வேண்டும் என விளக்கினர். அதனைத் தொடர்ந்து 11:30 மணிக்கு ஆம்புலன்ஸ மூலம் அபிநயாவின் உடல் முண்டியம்பாக்கம் கொண்டு செல்லப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை