உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / பாம்பு கடித்து இறந்த விவசாயி குடும்பத்திற்கு நிவாரணம் தர கோரிக்கை

பாம்பு கடித்து இறந்த விவசாயி குடும்பத்திற்கு நிவாரணம் தர கோரிக்கை

செஞ்சி; பாம்பு கடித்து இறந்த விவசாயி குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும் என தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கோரிக்கை விடுத்துள்ளர். தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க, விழுப்புரம் மாவட்ட ஒருங்கிணைப்பாளர், கரும்பு விவசாயிகள் பிரிவு மாநில செயலாளர் சக்திவேல் விடுத்துள்ள அறிக்கை: செஞ்சி தாலுகா வல்லம் கிராமத்தை சேர்ந்த விவசாயி சண்முகம் 43; கடந்த 10ம் தேதி இரவு பாம்பு கடித்து இறந்துள்ளார். பாம்பு கடித்த உடன் அவரை மேல் சித்தாமூர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்துச் சென்று சிகிச்சையில் சேர்த்த போது விஷ கடிக்கான மருந்து இல்லை உடனே செஞ்சி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் அவர் இறந்தார். இது போன்ற சம்பவங்கள் இனி நடக்காமல் இருக்கு அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களில் பாம்பு கடிக்கான மருந்தை இருப்பு வைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் தமிழக அரசு இறந்த விவசாயி சண்முகம் குடும்பத்திற்கு வனவிலங்கு காப்பீட்டு திட்டத்தின் கீழ் ரூ.25 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறி உள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை