மேலும் செய்திகள்
கண்டன ஆர்ப்பாட்டம்
22 hour(s) ago
வேலுநாச்சியார் நினைவு தினம் த.வெ.க., அனுசரிப்பு
23 hour(s) ago
தர்மசாஸ்தா அய்யப்பன் சன்னதியில் மண்டல பூஜை
23 hour(s) ago
ரங்கபூபதி கல்லுாரியில் கிறிஸ்துமஸ் விழா
23 hour(s) ago
செஞ்சி: செஞ்சியில் சாத்தனுார் அணையை நந்தன் கால்வாயுடன் இணைக்க வலியுறுத்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.தென் பெண்ணையாற்றில் சாத்தனுார் அணையில் இருந்து நந்தன் கால்வாய்க்கு ஓலையாறு, துறிஞ்சல் ஆறு வழியாக தண்ணீர் கொண்டு வர தமிழக அரசு 309 கோடி ரூபாய் மதிப்பில் திட்டம் தயாரித்துள்ளது. அறிவிப்புடன் உள்ள இத்திட்டத்திற்கு தமிழக அரசு நிதி ஒதுக்கவில்லை.இத்திட்டத்திற்கு நிதி ஒதுக்க வலியுறுத்தி நீர்பாசனப் பிரிவு அமைச்சர் மற்றும் விழுப்புரம், திருவண்ணாமலை மாவட்ட அமைச்சர்களை நந்தன் கால்வாய் பாதுகாப்பு இயக்கத்தைச் சேர்ந்த நிர்வாகிகள் சந்தித்து கோரிக்கை மனு கொடுத்திருந்தனர்.இத்திட்டத்தை வரும் பட்ஜெட்டில் அறிவிக்க வலியுறுத்தி நேற்று செஞ்சியில் நந்தன் கால்வாய் பாதுகாப்பு சங்கம் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. சங்க செயலாளர் ரமேஷ்பாபு தலைமை தாங்கினார். ஆலோசகர் அறவாழி வரவேற்றார். துணைத் தலைவர் சேகர், செயலாளர்கள் கார்த்தி, வெற்றிச்செல்வன், சங்கர், துரைமுருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.காங்., நகர தலைவர் சூரியமூர்த்தி, வட்டார தலைவர் சக்திவேல், முன்னாள் வட்டார தலைவர் முருகன், கரும்பு விவசாயிகள் சங்கத் தலைவர் குண்டு ரெட்டியார் ஆகியோர் பேசினர். நந்தன் கால்வாய் பாதுகாப்பு இயக்க நிர்வாகிகள், விவசாயிகள், பொதுமக்கள் பங்கேற்றனர்.
22 hour(s) ago
23 hour(s) ago
23 hour(s) ago
23 hour(s) ago