உள்ளூர் செய்திகள்

ஆர்ப்பாட்டம்

திருவெண்ணெய்நல்லுார் : திருவெண்ணெய்நல்லுாரில் அமைச்சர் துரைமுருகனை கண்டித்து தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்பு உரிமைகளுக்கான சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. மாற்றுத்திறனாளிகளை இழிவாக பேசிய நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகனை கண்டித்து நேற்று மாலை திருவெண்ணெய்நல்லூர் வருவாய் ஆய்வாளர் அலுவலகம் முன்பு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்பு உரிமைகளுக்கான சங்கம் சார்பில் கண்டனம் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்தில் அமைச்சர் துரைமுருகனுக்கு எதிராக கண்டன கோஷம் எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில் திருவெண்ணெய்நல்லூர் பகுதியில் உள்ள 100க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை