| ADDED : டிச 10, 2025 06:27 AM
விழுப்புரம்: விழுப்புரம் ராமகிருஷ்ணா மிஷன் வித்யாலயா பள்ளி, சித்த மருத்துவத்துறை சார்பில் டெங்கு காய்ச்சல் தடுப்பு விழிப்புணர்வு முகாம் நடந்தது. ராமகிருஷ்ணா மிஷன் வித்யாலயா மேல்நிலைப் பள்ளியில் நடந்த முகாமிற்கு, பள்ளி தலைமை ஆசிரியர் சந்தியா தலைமை வகித்தார். செயலாளர் சுவாமி பரமசுகானந்தா முன்னிலை வகித்தார். சித்த மருத்துவ அலுவலர்கள் டாக்டர்கள் நித்யகுமாரி, அனுராதா ஆகியோர், கொசுவினால் பரவும் நோய்கள், டெங்கு காய்ச்சல் குறித்தும், அதன் தடுப்பு முறைகள், இயற்கை மருத்துவம் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதனையடுத்து, பள்ளி மாணவ, மாணவிகளுக்கு டெங்கு காய்ச்சல் தடுப்பு முன்னெச்சரிக்கையாக நிலவேம்பு கஷாயம் வழங்கப்பட்டது.