உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் /  அரசு மேல்நிலைப் பள்ளியில் தினமலர் -- பட்டம் வினாடி வினா போட்டி

 அரசு மேல்நிலைப் பள்ளியில் தினமலர் -- பட்டம் வினாடி வினா போட்டி

விக்கிரவாண்டி: 'தினமலர் -- பட்டம்' இதழ், ஆச்சாரியா கல்விக் குழுமம் இணைந்து நடத்தும் பதில் சொல் பரிசு வெல் வினாடி வினா போட்டி விக்கிரவாண்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் நடந்தது. முதற்கட்ட போட்டியில் 100கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பங்கேற்றனர். அதிக மதிப்பெண் பெற்ற 16 மாணவ மாணவிகள் தேர்வு செய்து 8 குழுக்களாக பிரித்து 2 சுற்று போட்டி நடந்தது. போட்டிக்கு, பள்ளி தலைமையாசிரியர் பக்தவச்சலம் தலைமை தாங்கி னார். உதவி தலைமை ஆசிரியர் முரளி கிருஷ்ணன், ஆசிரியை ரமாதேவி முன்னிலை வகித்தனர். 9ம் வகுப்பு மாணவர் கள் தமிழ்ச்செல்வன், ஸ்ரீநாத் முதலிடமும், சிவரஞ்சன், ஹரிஷ் 2ம் இடம் பிடித்தனர். வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பேரூராட்சி சேர்மன் அப்துல் சலாம், துணை சேர்மன் பாலாஜி ஆகியோர் சான்றிதழ் மற்றும் கேடயம் வழங்கினர். போட்டியில் பங்கேற்ற அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. பேரூராட்சி கவுன்சிலர் ரமேஷ் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் மாணவர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை