உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் /  நகராட்சி மேல்நிலை பள்ளியில் தினமலர் - பட்டம் வினாடி வினா

 நகராட்சி மேல்நிலை பள்ளியில் தினமலர் - பட்டம் வினாடி வினா

விழுப்புரம்: 'தினமலர் - பட்டம்' இதழ், ஆச்சார்யா கல்விக் குழுமம் இணைந்து நடத்தும், பதில் சொல்; பரிசு வெல் வினாடி வினா போட்டி, விழுப்புரம் பி.என். தோப்பு நகராட்சி மேல்நிலை பள்ளியில் நடந்தது. பள்ளியில் நடந்த முதற்கட்ட போட்டியில் 100க் கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். அதிக மதிப்பெண் பெற்ற 16 மாணவ, மாணவிகள் தேர்வு செய்து, 8 குழுக்களாக பிரிக்கப்பட்டு 2 சுற்று போட்டி நடந்தது. பள்ளியின் தலைமை ஆசிரியர் ரகு தலைமை தாங்கினார். பட்டதாரி ஆசிரியர்கள் முருகன், சவுந்தர்ராஜன் முன்னிலை வகித்தனர். இதில், 7 ஆம் வகுப்பு மாண வர்கள் கார்த்தி கே யன், முகிலன் முதலிடமும், 7 ஆம் வகுப்பு மாண வி குணவதி, 8ம் வகுப்பு மாணவர் ஜீவன்யா இரண்டாமிடம் பிடித்தனர். வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு விழுப்புரம் மாவட்ட பா.ம.க., இளைஞரணி செயலாளர் சீத்தாராஜா சான்றிதழ் மற்றும் கேடயம் வழங்கினார். போட்டியில் பங்கேற்ற அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











முக்கிய வீடியோ