மேலும் செய்திகள்
'தினமலர் -பட்டம்' இதழ் வினாடி வினா போட்டி
24-Dec-2024
திருவெண்ணெய்நல்லுார்: திருவெண்ணெய்நல்லுார் போன் நேரு மேல்நிலைப்பள்ளியில் புதுச்சேரி தினமலர் சார்பில் பதில் சொல்,பரிசு வெல், வினாடி வினா போட்டி நடந்தது.போட்டியில் 75 மாணவ மாணவிகள் பங்கேற்றனர். பின்னர் அதில் 16 மாணவ மாணவிகள் தேர்வு செய்து, 8 குழுக்களாக பிரிக்கப்பட்டு 3 சுற்றுக்களாக போட்டி நடத்தப்பட்டது. இந்த போட்டியில் 9ம்வகுப்பு மாணவர்கள் பார்க்கவன், சபரிநாதன் முதலிடத்தையும், 8ம் வகுப்பு மாணவிகள் இந்துஜா,லக்ஷயா ஸ்ரீ இரண்டாம் இடத்தையும் பிடித்தனர்.போட்டியில் வெற்றி பெற்ற மாணவ ,மாணவிகளுக்கு. பள்ளி தாளாளர் வாசுதேவன், நிர்வாக இயக்குனர் விஜயசாந்தி வாசுதேவன், இணை இயக்குனர் வைபவ் ஆகியோர் மாணவர்களை பாராட்டி சான்றிதழ் வழங்கினர். நிகழ்ச்சியில் பள்ளி ஆசிரியர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.
24-Dec-2024