மேலும் செய்திகள்
மின்சார வாரிய தொழிலாளர் சங்க கண்டன ஆர்ப்பாட்டம்
10 minutes ago
28ம் தேதி விவசாயிகள் குறைதீர் கூட்டம்
11 minutes ago
எல்லீஸ் அணைக்கட்டிலிருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு
12 minutes ago
விழுப்புரம்: விழுப்புரம் டி.இ.எல்.சி., நடுநிலைப் பள்ளியில், ' தினமலர் - பட்டம்' இதழ், ஆச்சாரியா கல்விக்குழுமம் இணைந்து நடத்தும், 'பதில் சொல், பரிசு வெல்' வினாடி வினா போட்டி நடந்தது. பள்ளியில் நடந்த முதற்கட்ட போட்டியில் 100க்கும் மேற்பட்ட மாணவ, மா ணவியர்கள் பங்கேற்றனர். அதில் அதிக மதிப்பெண் பெற்ற 16 மாணவர்களை தேர்வு செய்து, 8 குழுக்களாக பிரிக்கப்பட்டு 2 சுற்று களாக போட்டி நடந்தது. பள்ளியின் தலைமை ஆசிரியர் அருள்ஜான்சன் தலைமை தாங்கினார். ஆசிரியர்கள் எலியாஸ், டைட்டஸ் முன்னிலை வகித்தனர். 8 ம் வகுப்பு மாணவர்கள் பெஞ்சமின், தமிழ் விண்ணவன் முதலிடம் பிடித்தனர். மாணவிகள் மோகிதா, தனுஷ்கா இரண்டாமிடம் பிடித்தனர். வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு, விழுப்புரம் ராயல்ஸ் லயன் சங்க வட்டார தலைவர் ராஜா, சாசன தலைவர் சபரிநாதன், பொருளாளர் சதீஷ், துணை தலைவர் குமார் ஆகியோர் சான்றிதழ் மற்றும் கேடயம் வழங்கினர். போட்டியில் பங்கேற்ற அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது.
10 minutes ago
11 minutes ago
12 minutes ago