உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / பெட்ரோல் தீ பற்றியதில் மளிகை கடைக்காரர் பலி

பெட்ரோல் தீ பற்றியதில் மளிகை கடைக்காரர் பலி

திருக்கோவிலூர் : மொபட்டில் பெட்ரோல் எடுத்துச் சென்றபோது ஏற்பட்ட தீவிபத்தில் சிக்கிய மளிகை கடைக்காரர் சிகிச்சை பலனின்றி இறந்தார். விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் அடுத்த கோளப்பாறை கிராமத்தைச் சேர்ந்தவர் சண்முகம்,55. மளிகை கடை வைத்திருந்தார். நேற்று முன்தினம் திருக்கோவிலூரில் இருந்து கேனில் பெட்ரோல் வாங்கிக் கொண்டு தனது மொபட்டில் ஊருக்கு திரும்பினார். சந்தப்பேட்டை கனகனந்தல் சாலையில் எதிரே வந்த மோட் டார் சைக்கிள் மீது மொபட் திடீரென மோதியது. மொபட்டில் இருந்த பெட்ரோல் கேன் கீழே விழுந்து தீப்பிடித்தது. பலத்த தீக்காயமடைந்த சண்முகம் திருக்கோவிலூர் அரச மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பின் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி இறந்தார். திருக்கோவிலூர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை