| ADDED : ஜூலை 19, 2011 12:29 AM
உளுந்தூர்பேட்டை : உளுந்தூர்பேட்டை அடுத்த பு.மாம்பாக்கம் கிராமத்தில் மனு நீதி நாள் முகாம் நடந்தது. குமரகுரு எம்.எல்.ஏ., தலைமை வகித்தார். தாசில்தார் ராதாகிருஷ்ணன் முன்னிலை வகித்தார். ஊராட்சி தலைவர் சுரேஷ் வரவேற்றார். சிறப்பு விருந்தினராக ஆர்.டி.ஓ., வரலட்சுமி கலந்து கொண்டார். தனி தாசில்தார் துளசிபாய், ஒன்றிய செயலாளர் செண்பகவேல், ராமமூர்த்தி, பாஸ்கரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். முகாமில் 13 பேருக்கு முதியோர் உதவி தொகை, 5 பேருக்கு பட்டா மாற்றம், 3 பேருக்கு மணிலா விதைகள் வழங்கப்பட்டன. 318 மனுக்கள் பெறப்பட்டன. அவற்றில் 250க்கும் மேற்பட்ட மனுக்கள் முதியோர் உதவி தொகை கேட்டு விண்ணப்பித்துள்ளனர்.