உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / வாக்கூர் பள்ளியில் நோட்டு வழங்கல்

வாக்கூர் பள்ளியில் நோட்டு வழங்கல்

விழுப்புரம் : விக்கிரவாண்டி அரிமா சங்கம் சார்பில் வாக்கூர் பள்ளியில் மாணவர்களுக்கு இலவச நோட்டு வழங்கும் விழா நடந்தது. ஊராட்சி தலைவர் வசந்தி நாகராஜன் தலைமை தாங்கினார். அரிமா சங்க தலைவர் ராசி ரவிச்சந்திரன் முன்னிலை வகித்தார். தலைமை ஆசிரியை விஜயலட்சுமி வரவேற்றார். விழாவில் மாணவ, மாணவிகளுக்கு இலவச நோட்டு, பென்சில் மற்றும் பேனா வழங்கப் பட்டது. அரிமா சங்க செயலாளர் முருகன், பொருளாளர் அஸ்கர் அலி, வட்டார தலைவர் சந்தானம் மற்றும் கிராம கல்விக்குழு உறுப்பினர்கள் எத்துராசு, ஆறுமுகம், பாஸ்கர், கணபதி, ராஜா உட்பட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி