உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / டாஸ்மாக் கொள்கை மாறுதல் பணியாளர் சங்கம் வரவேற்பு

டாஸ்மாக் கொள்கை மாறுதல் பணியாளர் சங்கம் வரவேற்பு

விழுப்புரம் : டாஸ்மாக் நிர்வாகம் அறிவித்துள்ள பணியா ளர்கள் மாறுதல் கொள்கையை வரவேற்று தமிழ்நாடு டாஸ்மாக் பணியாளர்கள் சங்க நிர்வாகிகள் தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர். தமிழ்நாடு டாஸ்மாக் பணியாளர்கள் சங்க ஏ.ஐ. டி.யு.சி., மாவட்ட செயற்குழு கூட்டம் விழுப்புரத்தில் நடந்தது. மாவட்ட தலைவர் கோவிந்தராஜ் தலைமை தாங்கினார். பொருளாளர் அய்யப்பன் வரவேற்றார். செயலாளர் பார்த்தசாரதி சங்க அறிக்கை தாக்கல் செய்தார். மாநில தலைவர் சவுந்திர பாண்டியன், செய லாளர் காரல்மார்க்ஸ், அரசு பணியாளர் சங்க பொது செயலாளர் முருகன் சிறப்புரையாற்றினர். கூட்டத்தில் டாஸ்மாக் நிர்வாகம் அறிவித்துள்ள மாறுதல் கொள்கையை வரவேற்பது, இடமாறுதல் செய்யும் போது பணிபுரியும் தாலுகாவிலேயே இடமாற்றம் செய்ய வேண்டும். நியாயமற்ற முறையில் பணி மாறுதல் செய்ய காரணமான அதிகாரிகளை வன்மையாகக் கண்டித்தல் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை