உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / கிரிக்கெட் போட்டியில் அரசு கல்லூரி வெற்றி

கிரிக்கெட் போட்டியில் அரசு கல்லூரி வெற்றி

திருவெண்ணெய்நல்லூர் : திருவெண்ணெய்நல்லூர் அரசு கலைக் கல்லூரி கிரிக்கெட் போட்டியில் முதல்பரிசை வென்றது. கடலூர் அண்ணா விளையாட்டரங்கில் ரோட்ராக்ட் சங்கங்களின் சார்பில் மண்டல அளவிலான கிரிக்கெட் போட்டி நேற்று முன்தினம் நடந்தது. இதில் எட்டு அணிகள் மோதியது. இறுதிப்போட்டியில் திருவெண்ணெய்நல்லூர் அரசு கலைக்கல்லூரி அணி யும், கடலூர் சங்கமம் அணியும் மோதியது. இதில் திருவெண்ணெய்நல்லூர் கல்லூரி அணி வெற்றிபெற் றது. இதேபோல் விழுப்புரத்தில் நடந்த பாரதிதாசன் பாடல் ஒப்புவித்தல் போட் டியில் இக்கல்லூரியைச்சேர்ந்த மாணவி காயத்ரி முதல்பரிசை பெற்றார். வெற்றி பெற்ற மாணவர்கள் கல்லூரி முதல்வர் ராஜசேகரனை சந்தித்து வாழ்த்து பெற்றனர். விழுப்புரம் சென்ட்ரல் ரோட்டரி தலைவர் அசோக் குமார், மேலாளர் அமிர்தலிங்கம் ரோட்ராக்ட் சங்க ஒருங்கிணைப்பாளர் கவிதா உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை