உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / தினமலர் கொலு போட்டி விழுப்புரத்தில் பரிசளிப்பு

தினமலர் கொலு போட்டி விழுப்புரத்தில் பரிசளிப்பு

விழுப்புரம் : தினமலர் நாளிதழ் சார்பில் விழுப்புரம் நகரில் கொலு போட்டி நடத்தி பரிசளிக்கப்பட்டது. தினமலர் நாளிதழ் சார்பில் ஆண்டு தோறும் தமிழகம், புதுச்சேரியில் நவராத்திரி விழாவையொட்டி கொலு போட்டி நடத்தப்படுகிறது. இந்த ஆண்டும் பல்வேறு இடங்களில் கொலு போட்டி நடத்தப்படுகிறது. விழுப்புரம் நகரின் பல்வேறு பகுதிகளிலும் கொலு வைத்திருந்த வீடுகளுக்கு நேற்று மாலை நடுவர் குழுவினர் சென்று பார்வையிட்டு சிறந்தவற்றை தேர்வு செய்தனர். இதில் முதல் பரிசு பெற்ற கிழக்கு சண்முகபுரம் காலனி சரஸ்வதி ராமச்சந்திரனுக்கு பட்டு புடவை, இரண்டாம் பரிசு பெற்ற ஆறுமுகம் லே-அவுட் ராஜலட்சுமிக்கு வெள்ளி விளக்கும், போட்டியில் பங்கேற்றவர்களுக்கு ஆறுதல் பரிசுகளும் வழங்கப்பட்டது. வெற்றி பெற்றவர்களுக்கு கெடார் சிவக்குமார் பரிசுகளை வழங்கினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி