உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / ஆட்டோ டிரைவர்களுக்குள் தகராறு: ஒருவர் கைது

ஆட்டோ டிரைவர்களுக்குள் தகராறு: ஒருவர் கைது

விழுப்புரம்: விழுப்புரத்தில் ஆட்டோ சவாரி பிடிப்பதில் ஏற்பட்ட தகராறில், ஒருவரை போலீசார் கைது செய்தனர்.விழுப்புரம் வழுதரெட்டி பகுதியைச் சேர்ந்த ராமன் மகன் புஷ்பராஜ், 30; இவரும், நன்னாடு பகுதியைச் சேர்ந்த ரங்கசாமி மகன் காளியும்,34; விழுப்புரம் புதிய பஸ் நிலையம் வாயில் பகுதியில் உள்ள ஆட்டோ ஸ்டாண்டில், ஆட்டோ ஓட்டி வருகின்றனர்.இந்நிலையில் கடந்த 28ம் தேதி மாலை 4 மணிக்கு, இவர்கள் இருவருக்கும், ஆட்டோவில் சவாரி ஏற்றுவதில் ஏற்பட்ட தகராறில், புஷ்பராஜ், காளியை திட்டி, தாக்கியுள்ளார். இது குறித்து, காயடைந்த காளி புகார் அளித்ததின் பேரில், விழுப்புரம் தாலுகா போலீசார் புஷ்பராஜை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ