| ADDED : டிச 10, 2025 06:33 AM
செஞ்சி: செஞ்சி ராஜாதேசிங்கு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, அரசு பெண்கள் மேல்நிலை பள்ளிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கும் விழா நடந்தது. ராஜா தேசிங்கு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடந்த விழாவிற்கு, ஒன்றிய சேர்மன் விஜயகுமார் தலைமை தாங்கினார். பேரூராட்சி சேர்மன் மொக்தியார் அலி, பி.டி.ஏ., தலைவர் மாணிக்கம் முன்னிலை வகித்தனர். டி.இ.ஓ., உதயசூரியன் வரவேற்றார். மஸ்தான் எம்.எல்.ஏ., 255 மாணவர்கள், 385 மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்களை வழங்கினார். வல்லம் ஒன்றிய சேர்மன் அமுதா ரவிக்குமார், மாவட்ட கவுன்சிலர் அரங்க ஏழுமலை, தலைமையாசிரியர்கள் ராமசாமி, செந்தில்குமார், கவுன்சிலர்கள் சங்கர், பொன்னம்பலம், அஞ்சலை, சுமித்ரா, சங்கீதா மற்றும் மேலாண்மைக் குழுவினர், ஆசிரியர்கள் பங்கேற்றனர். நிகழ்ச்சியை, ஆசிரியர் பாலமுருகன் தொகுத்து வழங்கினார். பள்ளி துணை ஆய்வாளர் வினாயகமூர்த்தி நன்றி கூறினார்.