உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / துணை பொதுச்செயலாளரிடம் தி.மு.க., நிர்வாகி வாழ்த்து

துணை பொதுச்செயலாளரிடம் தி.மு.க., நிர்வாகி வாழ்த்து

விழுப்புரம்: தி.மு.க., துணை பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் பொன்முடியை, திருவெண்ணெய்நல்லுார் நிர்வாகி சரவணகுமார் உள்ளிட்ட தி.மு.க., வினர் சந்தித்து வாழ்த்து பெற்றனர். தமிழக முன்னாள் உயர் கல்வித்துறை அமைச்சர், திருக்கோவிலுார் தொகுதி எம்.எல்.ஏ., பொன்முடிக்கு, மீண்டும் தி.மு.க., துணை பொதுச்செயலாளர் பதவி வழங்கி, தி.மு.க., தலைவர் முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். இதனையடுத்து, திருவெண்ணெய்நல்லுாரைச் சேர்ந்த தி.மு.க., பிரமுகர் தொழிலதிபர் சரவணகுமார் மற்றும் கட்சியினர், விழுப்புரத்தில் துணை பொதுச்செயலாளர் பொன்முடியை நேரில் சந்தித்து, சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்ததோடு, வாழ்த்து பெற்றனர். திருவெண்ணெய்நல்லுார் ஒன்றிய செயலாளர்கள் விசுவநாதன், சடகோபன் மற்றும் நிர்வாகிகள் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை