உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / மத்திய அரசை கண்டித்து தி.மு.க., ஆர்ப்பாட்டம்

மத்திய அரசை கண்டித்து தி.மு.க., ஆர்ப்பாட்டம்

திண்டிவனம் : மத்திய அரசை கண்டித்து திண்டிவனம் தாதாபுரத்தில் தி.மு.க., சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. நுாறு நாள் வேலை உறுதி திட்டத்தின் கீழ் தழிழக அரசிற்கு நிதியை தர மறுக்கும் மத்திய அரசை கண்டித்து, ஒலக்கூர் மேற்கு ஒன்றிய தி.மு.க., சார்பில் தாதாபுரத்தில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. ஒலக்கூர் மேற்கு ஒன்றிய தி.மு.க., செயலாளர் ராஜாராம் முன்னிலை வகித்தார். விழுப்புரம் வடக்கு மாவட்ட அவைத்தலைவர் சேகர் தலைமை தாங்கி கண்டன உரையாற்றினார். ஒன்றிய அவைத்தவைர் அமராவதி, பொதுக்குழு உறுப்பினர் சாந்தி, பஞ்சாயத்து தலைவர் பூமிலிங்கம், ஒன்றிய நிர்வாகிகள் திருஞானசம்பந்தம், ேஹமநாதன், தாண்டவமூர்த்தி, பாண்டியன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

வானுார்

கிளியனுார் ஒன்றிய தி.மு.க., சார்பில் உப்புவேலுார், கிளியனுார் பகுதிகளில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, ஒன்றிய செயலாளர் ராஜி தலைமை தாங்கினார். அவைத் தலைவர் புஷ்பராஜ், ஒன்றிய துணைச் செயலாளர்கள் குப்புசாமி, அழகேசன், அய்யம்மாள் சுப்ரமணியம்.முன்னாள் ஒன்றிய சேர்மன் சிவா, பொருளாளர் பழனி, மாவட்ட பிரதிநிதிகள் குழந்தைவேலு, தனபால்ராஜ், சிவக்குமார், ஆதிதிராவிடர் நலத்துறை அமைப்பாளர் வேலு, ஒன்றிய துணைச் சேர்மன் பருவகீர்த்தனா விநாயகமூர்த்தி, மாவட்ட கவுன்சிலர்கள் பிரேமா குப்புசாமி, கவுதம், முன்னாள் ஊராட்சி துணைத் தலைவர் அய்யப்பன் உட்பட பலர் பங்கேற்றனர்.

அவலுார்பேட்டை

அவலுார்பேட்டை கடைவீதியில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, முன்னாள் எம்.எல்.ஏ., செந்தமிழ்ச்செல்வன் தலைமை தாங்கி கண்டன உரையாற்றினார். ஒன்றிய சேர்மன் கண்மணி, செயலாளர் நெடுஞ்செழியன், துணை சேர்மன் விஜயலட்சுமி, மாவட்ட கவுன்சிலர்கள் சாந்தி, செல்வி ராமசரவணன், ஒன்றிய கவுன்சிலர் ஷாகின் அர்ஷத், ஊராட்சி தலைவர் செல்வம், சம்பத், மணியரசன், பாலமுருகன் உட்பட பலர் பங்கேற்றனர். இதே போல் வளத்தியிலும் ஆர்ப்பாட்டம் நடந்தது.

செஞ்சி

என்.ஆர்., பேட்டை மற்றும் ஆலம்பூண்டி ஊராட்சிகளில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, மாவட்ட செயலாளர் மஸ்தான் எம்.எல்.ஏ., தலைமை தாங்கினார். ஒன்றிய சேர்மன் விஜயகுமார் வரவேற்றார். மத்திய ஒன்றிய செயலாளர் விஜயராகவன், மேற்கு ஒன்றிய செயலாளர் பச்சையப்பன் முன்னிலை வகித்தனர். மாவட்ட கவுன்சிலர் அரங்க ஏழுமலை, பொதுக்குழு உறுப்பினர் மணிவண்ணன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ஆனந்த், அவைத் தலைவர்கள் வாசு, ஆறுமுகம்.மாவட்ட பிரதிநிதி அய்யாதுரை, கோட்டீஸ்வரன், நிர்வாகிகள் சிவக்குமார், பழனி, பாஷா மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை