உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் /  தி.மு.க., நலத்திட்ட உதவி வழங்கல்

 தி.மு.க., நலத்திட்ட உதவி வழங்கல்

விழுப்புரம்: துணை முதல்வர் உதயநிதி பிறந்த நாளையொட்டி மத்திய மாவட்ட தி.மு.க., கோலியனுார் மத்திய ஒன்றியம் சார்பில் நலத்திட்ட உதவி வழங்கும் விழா நடந்தது. மத்திய மாவட்ட பொறுப்பாளர் லட்சுமணன் தலைமை தாங்கி, பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அய்யங்கோவில்பட்டு, முத்தாம்பாளையம், நன்னாடு, வேடம்பட்டு, தோகைப்பாடி, கொண்டங்கி, சத்திப்பட்டு, ஒருகோடி, கப்பூர், கோவிந்தபுரம், திருப்பச்சாவடிமேடு, மரகதபுரம், கண்டியமடை, கண்டம்பாக்கம் பகுதிகளில் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினர் கண்ணப்பன், ஒன்றிய பொறுப்பாளர் ராஜா, ஒன்றிய சேர்மன் சச்சிதானந்தம், துணை சேர்மன் உதயகுமார் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை