உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / அரசு கல்லுாரியில் நாடகப் போட்டி

அரசு கல்லுாரியில் நாடகப் போட்டி

வானுார்; வானுார் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் கலைப்போட்டியில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் அரசின் 'கலையால் கல்வி வெல்வோம்' கலைத் திருவிழா நடந்து வருகிறது. வானுார் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில், கலைத் திருவிழாவின் ஒரு பகுதியாக நாடகம் மற்றும் பொம்மலாட்ட போட்டி, நடந்தது. இதில் கல்லுாரி மாணவ, மாணவியர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர். முதல்வர் வில்லியம் தலைமை தாங்கி, மாணவர்கள் பல்வேறு கலைகளை கற்றுக்கொண்டு, தன்னம்பிக்கையோடு வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என அறிவுறுத்தினார். ஆங்கிலத்துறை தலைவர் ராஜேஸ்வரி ஜெயராணி வரவேற்றார். சிறப்பு விருந்தினர்களாக புதுச்சேரி தன்னம்பிக்கை பொம்மலாட்டக்குழுவின் ஒருங்கிணைப்பாளர் எலிசபெத்ராணி, நந்தகோபால், கள்ளக்குறிச்சி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியின் உதவி பேராசிரியர் ருக்மாங்கதன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர். ஒருங்கிணைப்பாளர் தேவநாதன் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி