உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் /  ஓட்டுச்சாவடி முகாம்களில் டி.ஆர்.ஓ., ஆய்வு

 ஓட்டுச்சாவடி முகாம்களில் டி.ஆர்.ஓ., ஆய்வு

விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி தொகுதி ஓட்டுச் சாவடி முகாம்களில் டி.ஆர்.ஓ ., ஆய்வு செய்து ஆலோசனை வழங்கினார். விக்கிரவாண்டி தொகுதியில் உள்ள ஓட்டு சாவடிகளில், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணி முகாம் நேற்று நடந்தது. வி.சாலை, முண்டியம்பாக்கம், சிந்தாமணி உள்ளிட்ட பல்வேறு ஓட்டு சாவடிகளில் நடந்த முகாம் பணிகளை டி.ஆர்.ஓ., ஹரிதாஸ் ஆய்வு செய்து, எத்தனை சதவீத பணிகள் முடிக்கப்பட்டுள்ளது என கேட்றிந்தார். மாலையில் தாலுகா அலுவலகத்தில் நடந்த கூட்டத்தில், முகாம் பணிகள் குறித்து ஆலோசனை வழங்கினர். தொகுதி ஓட்டுப்பதிவு அலுவலர் சந்திரசேகரன், உதவி ஓட்டுப்பதிவு அலுவலர் செல்வமூர்த்தி, தேர்தல் தனி தாசில்தார் பாரதிதாசன், மண்டல துணை தாசில்தார் தட்சிணாமூர்த்தி, நேர்முக உதவியாளர் சாதிக் உள்ளிட்ட வருவாய்த்துறை அதிகாரிகள் பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி