உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / தொடர் மழை காரணமாக வீடூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

தொடர் மழை காரணமாக வீடூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

விக்கிரவாண்டி,: வீடூர் அணைக்கு தொடர் மழை காரணமாக நீர் வரத்து அதிகரித்து வருகிறது.விழுப்புரம் மாவட்டம் , திண்டிவனம் அடுத்த வீடூர் அணையிலிருந்து தமிழக பகுதியில் 2,200 ஏக்கர் விவசாய நிலங்களும், புதுச்சேரியில் 1,000 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.அணையின் மொத்த கொள்ளவான 32 அடியில் (605 மில்லியன் கன அடி) கடந்த மாதம் 5ம் தேதி 21 அடி (110.74 மில்லியன் கன அடி ) தண்ணீர் இருப்பு இருந்தது.இந்நிலையில் நேற்று முன்தினம் முதல் பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக அணைக்கு நேற்று பிற்பகல் 4:00 மணிக்கு வினாடிக்கு 1505 கன அடி தண்ணீர் வரத்து இருந்தது.இதனால் அணையின் நீர் மட்டம் 24.600 அடி (190.72 மில்லியன் கன அடி) உயர்ந்தது. நீண்ட இடைவெளிக்கு பிறகு அணையின் நீர் மட்டம் உயர்ந்து வருவதால் அணை பாசனத்தை நம்பியுள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை