உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / அனுமந்தை ஏரியில் கழிவுகள் கொட்டும் அவலம்

அனுமந்தை ஏரியில் கழிவுகள் கொட்டும் அவலம்

மரக்காணம், : மரக்காணம் அடுத்த அனுமந்தை ஏரியில் டிராக்டர் மூலம் கழிவுகளை ஏற்றி வந்து கொட்டுவதால் ஏரி நீர் மாசடைந்து பாழாகி வருகிறது.மரக்காணம் அடுத்த அனுமந்தை ஏரியில் உள்ள நீரை விவசாயிகள் பாசனத்திற்கு பயன்படுத்தி வருகின்றனர். மேலும் அந்த பகுதியில் உள்ள கல்நடைகளின் குடிநீருக்கும் பயன்படுகிறது.ஏரியின் அருகே கழுவெளி ஏரி உள்ளதால், அந்த பகுதியில் உள்ள 1000க்கும் மேற்பட்ட பறவைகள் ஏரிக்கு வருகின்றன.இந்நிலையில் சில தினங்களாக ஏரியின் அருகே உள்ள கீழ் பேட்டையைச் சேர்ந்த சிலர் டிராக்டர் மூலம் கழிவு மற்றும் குப்பைகளை ஏற்றிவந்து ஏரியை ஆக்கிரமிப்பு செய்து கொட்டி வருகின்றனர்.இதனால் மேச்சலுக்கு வரும் மாடுகள் கழிவு நீர் குடிக்கும் அவலம் ஏற்பட்டுள்ளது. ஏரியில் உள்ள மீன்கள், பாதிப்புக்குள்ளாகியுள்ளது. எனவே, ஏரியில் குப்பை கழிவுகள் கொட்டுவதைத் தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை