மேலும் செய்திகள்
பூச்சிக்கொல்லி மருந்து குடித்து வாலிபர் பலி
16-Jul-2025
திருவெண்ணெய்நல்லுார்: டிராக்டர் மோதிய விபத்தில் மூதாட்டி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். திருவெண்ணெய்நல்லுார், காந்திகுப்பம், நரிக்குறவர் பகுதியை சேர்ந்த குடுபாஷா மனைவி ஜெரினா, 55; இவர் கடந்த 29ம் தேதி இரவு 7:30 மணிக்கு, காந்தி குப்பத்தில் உள்ள அரசூர் - திருவெண்ணெய்நல்லுார் சாலையை கடந்தார். அப்போது அந்த வழியாக அரசூர் நோக்கி சென்ற டிராக்டர் ஜெரினா மீது மோதியதில் அவர் படுகாயம் அடைந்தார். அங்கிருந்தவர்கள் அவரை விழுப்புரம், முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று முன் தினம் உயிரிழந்தார். திருவெண்ணெய்நல்லுார் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
16-Jul-2025