| ADDED : பிப் 22, 2024 11:52 PM
விழுப்புரம்: விழுப்புரத்தில் தமிழக பட்ஜெட் ஏமாற்றம் அளிப்பதாக உள்ளது என அரசு பணியாளர் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்ததுவிழுப்புரம் கலெக்டர் அலுவலகம் முன நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, சங்க மாநில இணை பொதுச் செயலாளர் சிவக்குமார் தலைமை தாங்கினார். டாஸ்மாக் பணியாளர் சங்க மாநிலச் செயலாளர் இளங்கோவன் கண்டன உரையாற்றினார்.மாவட்ட நிர்வாகிகள் கேசவன், மணிகண்டன், ருக்மணி, சுரேந்தர், ஜெயக்குமார் முன்னிலை வகித்தனர்.ஆர்ப்பாட்டத்தில், தமிழக அரசு பணியாளர்களுக்கு, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்தி வரும் நிலையில், தற்போது வெளியான தமிழக அரசின் பட்ஜெட்டில், பழைய ஓய்வூதிய திட்டம் உள்ளிட்ட அரசு பணியாளர்களின் கோரிக்கைகள் குறித்த அறிவிப்பு வெளியாகவில்லை. தமிழக அரசு கோரிக்கையை புறக்கணித்து, பல லட்சம் பணியாளர்களுக்கு ஏமாற்றம் அளித்ததாக பட்ஜெட் குறித்து கண்டன உரையாற்றினர்.