மேலும் செய்திகள்
அஞ்சல் துறை திட்டங்கள் சிறப்பு மேளா நிகழ்ச்சி
4 minutes ago
கிறிஸ்துமஸ் விழா
5 minutes ago
மேலாண் இயக்குநர் ஆய்வு
10 minutes ago
அரசு கல்லுாரியில் கருத்தரங்கம்
11 minutes ago
வானுார்: வானுார் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் மூன்றாம் ஆண்டு மாணவர்களுக்கு இரண்டு நாள் வேலை வாய்ப்பு பயிற்சி பட்டறை நடந்தது. வேலை வாய்ப்பு அதிகாரி காந்திமதி வரவேற்றார். கல்லுாரி முதல்வர் வில்லியம் தலைமை தாங்கி, வளர்ந்து வரும் தொழில்நுட்ப உலகில் மாணவர்கள் போட்டி உலகை சமாளிக்க தங்களின் திறமைகளை வளர்த்துக்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தினார். சிறப்பு விருந்தினராக வானுார் டைடல் பார்க் எஸ்.யு.வி., நிறுவன மேலாண் இயக்குநர் யுவராஜ், பன்னாட்டு அளவில் வேலை வாய்ப்புகள் குவிந்துள்ளதாகவும், அதற்கான திறன் மேம்பாட்டு பயிற்சி பெற்று தங்களை தயார்ப்படுத்திக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தினார். ஹிக்கின்ஸ் நிறுவன தலைமை பயிற்சி நிறுவனர் சீனிவாசன், வேலை வாய்ப்புக்கான பயிற்சியை வழங்கினார். பயிற்சி பட்டறை நிறைவில், வானுார் டைடல் பார்க்கில் ஒரு வாரம் பயிற்சி பெற்ற 150 மாணவர்களுக்கு சான்றிதழும், தேர்வின் மூலம் சிறப்பிடம் பிடித்த 50 மாணவர்களுக்கு பாராட்டு சான்றிதழும் வழங்கப்பட்டது. வணிகவியல் துறை தலைவர் தேவநாதன் நன்றி கூறினார்.
4 minutes ago
5 minutes ago
10 minutes ago
11 minutes ago