உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / மாஜி சர்வேயர் வீட்டில் 10 சவரன் திருட்டு விழுப்புரத்தில் துணிகர சம்பவம்

மாஜி சர்வேயர் வீட்டில் 10 சவரன் திருட்டு விழுப்புரத்தில் துணிகர சம்பவம்

விழுப்புரம்,: விழுப்புரத்தில் ஓய்வு பெற்ற சர்வேயர் வீட்டில் 10 சவரன் நகைகளை திருடிய மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.விழுப்புரம் சாலாமேடு, என்.ஜி.ஜி.ஓ., காலனியை சேர்ந்தவர் கிருஷ்ணசாமி,80; ஓய்வு பெற்ற சர்வேயர். இவர், கடந்த 4ம் தேதி மனைவி கஸ்துாரியோடு சென்னைக்கு சென்றார். நேற்று காலை இவரது வீட்டின் முனகதவு உடைக்கப்பட்டிருந்தது. தகவலின்பேரில் விழுப்புரம் தாலுகா போலீசார் சென்று விசாரித்தனர். பீரோவிலிருந்த 10 சவரன் நகை, 200 கிராம் வெள்ளி பொருட்கள், 25 ஆயிரம் ரொக்கம் திருடு போனது தெரியவந்தது. அப்பகுதியில் உள்ள சிசிடிவி பதிவுகளை போலீசார் ஆய்வு செய்ததில், முகமூடி அணிந்த நபர் கிருஷ்ணசாமி வீட்டின் பூட்டை உடைப்பது பதிவாகியிருந்தது. அதே பகுதியில் ஓய்வுபெற்ற நீதிமன்ற ஊழியர் சிவராமகிருஷ்ணன், பொதுப்பணித் துறை உதவி பொறியாளர் பாலகுமாரன் வீடுகளி்ல் பூட்டை உடைத்து திருட முயன்றுள்ளனர். இச்சம்பவம் குறித்து விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர். சாலாமேடு என்.ஜி.ஜி.ஓ., நகரில் மர்ம நபர்கள் கடந்த சில தினங்களாக சுற்றித் திரிந்துள்ளனர். சந்தேகப்பட்டு அப்பகுதி மக்கள் கேட்டபோது, சாக்கடையை சுத்தம் செய்யும் பணிக்கு வந்துள்ளதாக தெரிவித்துள்ளனர். பூட்டிய வீடுகளை நோட்டமிட்டு மர்ம நபர்கள் திருட்டு சம்பவத்தை அரங்கேற்றியது தெரியவந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை