உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / மின்னல் தாக்கி விவசாயி படுகாயம்

மின்னல் தாக்கி விவசாயி படுகாயம்

திண்டிவனம்: திண்டிவனம் அருகே மின்னல் தாக்கியதில், விவசாயி படுகாயம டைந்தார். விழுப்புரம் மாவட்டம், கோணலுாரை சேர்ந்தவர் சுப்பிரமணி 53; விவசாயி. இவர் நேற்று மாலை 5:30 மணியளவில் தனது விவசாய நிலத்தில் வேலை செய்தார். அப்போது, பலத்த மழை பெய்த நிலையில், சுப்பிரமணி மீது மின்னல் தாக்கியது. இதில் அவருக்கு வயிறு, மார்பு, கை மணிக்கட்டு ஆகிய இடங்களில் படுகாயம் ஏற்பட்டது. அருகிலிருந்தவர்கள் அவரை மீட்டு புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. வெள்ளிமேடுபேட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை