உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / தந்தை மாயம்  மகன் புகார்

தந்தை மாயம்  மகன் புகார்

விழுப்புரம்: விழுப்புரத்தில் கோவிலுக்கு சென்ற தந்தையை காணவில்லை என மகன் போலீசாரிடம் புகார் அளித்துள்ளார்.விழுப்புரம் கே.கே., ரோட்டை சேர்ந்தவர் ஆழ்வார்,57; இவர், கடந்த 31ம் தேதி வீட்டில் அரக்கோணம் கோவிலுக்கு செல்வதாக கூறியதால், இவரது மகன் வெங்கடேஷ் தந்தையை விழுப்புரம் பழைய பஸ் நிலையத்தில் விட்டு வந்துள்ளார். கோவிலுக்கு சென்ற அவர் பல நாட்களாகியும் வீட்டிற்கு வரவில்லை. எங்குள்ளார் என்பது பற்றி எந்த தகவலும் இல்லை. குடும்பத்தார் அவரை பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. புகாரின் பேரில், விழுப்புரம் மேற்கு போலீசார் வழக்குப் பதிந்து ஆழ்வாரை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை